நெல்லை: ஓபிசி சான்றிதழ் மறுப்பு; சிறுபான்மை மாணவர்கள் பாதிப்பு

724பார்த்தது
நெல்லை: ஓபிசி சான்றிதழ் மறுப்பு; சிறுபான்மை மாணவர்கள் பாதிப்பு
நெல்லை, பாளையம்கோட்டையில் சிறுபான்மை சமூக மாணவ, மாணவியர் இந்த கல்வியாண்டில் மேற்படிப்புக்கு ஓபிசி சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்காக சொந்த இடத்தை விட்டு நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இதனால், வருவாய்த் துறையினர் சொந்த குடியிருப்பில் இல்லை எனக் கூறி ஓபிசி சான்றிதழ் விண்ணப்பங்களை நிராகரிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து  மாவட்ட ஆட்சியரிடம் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி