நெல்லை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

0பார்த்தது
நெல்லை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இன்று பகல் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில், நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.