நெல்லை மாவட்டத்தில் தினந்தோறும் பதிவாகும் மழை அளவு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (டிச.22) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாவட்டத்தில் ஒரே ஒரு பகுதியில் மட்டுமே மழை பெய்துள்ளது. அதன்படி கொடுமுடியாறு அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.