பருவமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் இன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள தாமிரபரணி பாலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பாலங்களில் உள்ள நீல மற்றும் அகலத்தை கணக்கிட்டு ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.