டவுனில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை சுவாமி காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.