இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் முருகப் பக்தர்கள் மாநாடு மதுரையில் இம்மாதம் இறுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக சார்பில் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.