பாளை தனியார் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். விழாவில் 200 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். மேலும், மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலரின் வாழ்த்து அட்டை நேரடியாக வழங்கப்பட்டது.