பாளை; வாக்காளர்களை தேடி வீடு வீடாக சென்று அதிகாரிகள்

3பார்த்தது
பாளை; வாக்காளர்களை தேடி வீடு வீடாக சென்று அதிகாரிகள்
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வழங்கப்படுகின்றன. பாளை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் இன்று நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்யவும், புதிய வாக்காளர்களை சேர்க்கவும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி