பாளை வடக்கு ஹைகிரவுண்ட் சாலைக்கு தமிழ் அறிஞர் தொ. பரமசிவன் பெயர் சூட்டப்படும் என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, வடக்கு ஹைகிரவுண்ட் சாலைக்கு தமிழறிஞர் தொ. பரமசிவன் பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது. பாளை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை மேயர் ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.