காவல்கிணறு அருகே கேட்பாரற்று கிடந்த ரூ. 19,900 பணத்தை பணகுடியைச் சேர்ந்த பிரவீன் ராஜா (32) என்பவர் நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்காக, இன்று அவரை நேரில் அழைத்த எஸ்பி சிலம்பரசன், பொன்னாடை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். நேர்மைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பலரால் பாராட்டப்படுகிறது.