நேற்று இரவு மகிழ்ச்சி நகரில் உள்ள ஒரு கோழிக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், பாளை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (46) என்பவரை அவரது நண்பர் செல்வம் (60) கத்தியால் குத்திக் கொலை செய்தார். போதையில் பாலகிருஷ்ணன் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த செல்வம் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படுகிறது. பெருமாள்புரம் போலீஸார் செல்வத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.