சபாநாயகர் அப்பாவு பாளையில் இன்று அளித்த பேட்டியில், தேர்தல் ஆணையம் மோசடி ஆணையமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் 2.0 முதலமைச்சராக வருவார் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள தேர்தல் ஆணையர், பாரத பிரதமர் சொல்லும் ஆணையை ஏற்று நடத்தும் நிறுவனமாக மாறிவிட்டதாகவும், அவர்களின் சதியை முறியடிப்போம் என்றும் அவர் கூறினார்.