நெல்லை மாநகர காவல் துறையின் சைபர் க்ரைம் தடுப்பு பிரிவு, அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 8 குறும்படங்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த குறும்படங்களை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி நேற்று வெளியிட்டார்.