திருநெல்வேலி: ஏடிஎம் பண மோசடி; கிளை மேலாளர் கைது

1பார்த்தது
திருநெல்வேலி: ஏடிஎம் பண மோசடி; கிளை மேலாளர் கைது
பொள்ளாச்சியைச் சேர்ந்த செல்வகுமார் (34), திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட சுமார் ரூ.1 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரம் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்வகுமார் பணத்தைக் கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி