திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த காவலர் ஆனந்த கலைச் செல்வன் (34), 2024 ஆம் ஆண்டு 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் பெற்றோரின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.