பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பாளையில் செய்தியாளர்களை சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும், தேமுதிகவுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். தங்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.