பாளை தியாகராஜ நகரில் முத்து மாலை(36) என்பவர் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அவரது கணவர் வெளி மாவட்டத்தில் பணிபுரிவதால் வீட்டில் தனியாக இருந்த நிலையில், நேற்று (மே 16) இரவு பைக்கில் வெளியே சென்று திரும்பியபோது மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.