திருநெல்வேலி பாளை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும், குழந்தையை காட்டுவதற்கு செவிலியர் உதவியாளர் ரூ.500 லஞ்சம் கேட்டதாக நெல்லையைச் சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். பணம் கொடுத்த பிறகே குழந்தையை காட்டியதாகவும், இது போன்ற செயல்களால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.