ராதாபுரம்: பேராசையில் ரூ.11 லட்சத்தை இழந்த வாலிபர்

712பார்த்தது
ராதாபுரம்: பேராசையில் ரூ.11 லட்சத்தை இழந்த வாலிபர்
ராதாபுரத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். பெண் ஒருவர் மூலம் அறிமுகமான நபர், கிரிப்டோ கரன்சி மூலம் போலி கணக்கு தொடங்கி, அதில் உள்ள ₹11.50 லட்சத்தை எடுக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய வாலிபர், ₹11.27 லட்சத்தை ஆன்லைன் மூலம் அந்த நபரிடம் இழந்துள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி