மேலப்பாளையத்தைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் நடத்தி வரும் செகண்ட் ஹேண்ட் கார் நிறுவனத்திற்கு, பிரபல கார் ஷோரூம் ஒன்று எக்ஸ்சேஞ்ச் கார்களை விற்பனைக்கு கொடுத்து வந்துள்ளது. திடீரென அந்த ஷோரூம் கார்களை கொடுப்பதை நிறுத்தியதால், ராபின்சன் தனது ஆதரவாளர்களுடன் ஷோரூமிற்குள் நுழைந்து ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், கம்ப்யூட்டர் மற்றும் போன் போன்ற உடைமைகளையும் சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.