பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் சில வழக்குகளில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதைக் கண்டித்து, பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மத்திய அரசு வழக்கறிஞர் ராம்நாத், இளைஞரணி மாநில துணைத்தலைவர் அசோக் சொக்கலிங்கம் ஆகியோர் நேற்று இரவு வள்ளியூர் உதவி கண்காணிப்பாளரிடம் (டிஎஸ்பி) புகார் அளித்தனர்.