திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி பெல்சியா கோல்டு, ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், 10, 12 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று (ஜூன் 9) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் பங்கேற்று தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கினார்.