மானூர் அடுத்த மேல பிள்ளையார் குளம் பகுதியில் நேற்று நான்கு வயது சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்தாள். மானூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமி, தற்போது நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.