பணகுடி பகுதியில் இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தெற்கு கும்பலம்பாடு, கிழக்குத் தெருவில் ராணி என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 23 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ராணியை கைது செய்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.