வள்ளியூரில் நூற்றுக்கணக்கான வாழை எரிந்து நாசம்

68பார்த்தது
வள்ளியூரில் நூற்றுக்கணக்கான வாழை எரிந்து நாசம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தில் உள்ள ஒரு விவசாயியின் வாழைத்தோட்டத்தில் நேற்று (செப்.7) திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இது குறித்து அந்த விவசாயி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாழைத்தோட்டத்தில் தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி