திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த பிரின்சி நேற்று (டிச.22) காலை பிரார்த்தனைக்கு சர்ச்சுக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போனது. இது குறித்த புகாரின் அடிப்படையில் கூடங்குளம் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் திருடிய நபர்கள் இன்று (டிசம்பர் 23) காலை நகைகளை ஜன்னல் வழியாக அவரது வீட்டுக்குள் வீசி சென்றனர்.