திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில் கொக்கிரகுளம் வசந்த நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கொக்கிரகுளம் அண்ணா சாலையில் பலாப்பழ ஓடையில் பாலம் அமைத்து தர வேண்டி மனு அளித்தனர். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.