நெல்லையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை வருகின்ற 25ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 22) இரவு முதல் நெல்லை மாநகரில் உள்ள கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு குழுவினராக நேரில் சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.