தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 6 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதே கும்பல் நெல்லை மானூர் அருகே இருவரையும் வெட்டியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை போலீசார் துரத்திப் பிடிக்கும் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.