மேல்மருவத்துாரைச் சேர்ந்த மனோகரனுக்கு திசையன்விளையில் இருந்த 15 ஏக்கர் நிலத்தை ரூ.20.37 கோடிக்கு வாங்க சீனிவாசன் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக 2024ல் ரூ.2 கோடி முன்பணம் வழங்கிய நிலையில், நிலத்தை மனைகளாகப் பிரிக்கும் பணியில் சீனிவாசன் ஈடுபட்டார். ஆனால், மனோகரன் அந்த நிலத்தை தனது மகன் சூரஜ் பெயருக்கு செட்டில்மென்ட் மூலம் மாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மனோகரன், அவரது மகள்கள் மதனா, கீர்த்தி மற்றும் மகன் சூரஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.