திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுண்டவிளை கிராமத்தில் 90 அடி ஆழ கிணற்றில் 78 வயது மூதாட்டி அன்னபாக்கியம் இன்று (அக்.,1) தவறி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி அன்னபாக்கியத்தை உயிருடன் மீட்டனர். இந்த மூதாட்டிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.