கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று காலை 6 மணி முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 33 தொழிலாளர்களுக்கு
வேலை வழங்க முடியாது என நிர்வாகம் கூறியதால், அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்து நிர்வாகத்தின் வாசலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.