ராதாபுரம்: விபத்தில் 9ம் வகுப்பு மாணவன் பலி

68பார்த்தது
ராதாபுரம்: விபத்தில் 9ம் வகுப்பு மாணவன் பலி
வள்ளியூர் நான்கு வழிச்சாலையில், தனியார் பள்ளி பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்ததில், படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி