பணகுடி பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து ரமேஷ் (36), சரவணன் (35), பார்வதிமுத்து (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரைத்ததை அடுத்து, ஆட்சியர் உத்தரவின் பேரில் மூவரும் பாளை மத்திய சிறையில் இன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.