நெல்லை கிழக்கு மாவட்ட
திமுக செயற்குழு கூட்டம் வள்ளியூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாவட்ட
திமுக செயலாளர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தொகுதிகளில்
திமுக அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது.