திசையன்விளை தெற்கு ஏறாந்தை கிராமத்தில் தேவாலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமூக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மணிவேல் (65) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், இரண்டு பெண்கள் மயக்கமடைந்தனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.