நெல்லை ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் மருத்துவர் கிறிஸ்டோபர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் அப்பாவு தோல்வியடைந்தார். எம்எல்ஏ பொறுப்பேற்ற பின் ஊர் திரும்பிய கிறிஸ்டோபர், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து தொகுதி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.