ராதாபுரம்; காலை முதல் மிதமான மழை

2பார்த்தது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை பணகுடி அருகே பழவூர், அழகநேரி போன்ற பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.