மணிமுத்தாறு அணையில் இருந்து ஆலடியூர் செட்டிமேடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலர் நாள்தோறும் பயன்படுத்தும் இந்த சாலையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சகதி நிறைந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.