சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற காவல்துறையினரின் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மாவட்ட எஸ்பி பிரசண்ண குமார் பார்வையிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதோடு, சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.