ராதாபுரம்; புதிய கட்டிடத்தை சபாநாயகர் திறந்து வைத்தார்

6பார்த்தது
ராதாபுரம்; புதிய கட்டிடத்தை சபாநாயகர் திறந்து வைத்தார்
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ரூ. 39.68 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை சுகாதார மையக் கட்டிடம் இன்று திறப்பு விழா கண்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதார அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :