நெல்லை தோமையார்புரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி மீனவ மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இனிதா என்ற பெண் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவர் உணவருந்தாமல் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.