தொடர் மழையால் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106 அடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி நேற்று இரவு அணையின் மதகில் இருந்து 4000 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இருப்பினும், 12 மணி நேரத்திற்குள் மதகில் தண்ணீர் அடைக்கப்பட்டது. தற்போது 80 அடி கால்வாயில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மழை ஓய்ந்ததால் தண்ணீர் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.