நெல்லை களக்காட்டில் சுரேஷ்(21) என்பவர் காதல் விவகாரத்தில் அடித்து கொல்லப்பட்டதாக தாய் கலெக்டரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், சுரேஷ் கொலையில் கைதான பேச்சிமுத்து, தனது உறவு பெண் மீது சுரேஷ் விருப்பம் கொண்டதால் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ஆணவக்கொலை இல்லை என்றும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் எஸ்பி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.