தவெக தலைவர் விஜய் நேற்று நெல்லையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சாலை வழியாக மாலை 5.45-மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது சாலைகளில் தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்களுக்கு கை அசைத்தப்படியும், மலர்கள் தூவியும் தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாக சென்றார். அப்போது, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே வந்தபோது ஆண், பெண், முதியவர்கள் என தொண்டர்கள் குவிந்தனர். விஜயின் பிரச்சார வாகனம் தொண்டர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.