மதுரை: “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் அருகே சென்று மலர் தூவி பூஜை செய்ய அனுமதி வழங்குவீர்களா?” என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் மார்ச் 4 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ‘5 பேரை மட்டும் அனுமதியுங்கள்; 5 பேரையும் நான் அனுப்புகிறேன்; தீபம் ஏற்ற சொல்லவில்லை; தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றுவதற்கான முதல் படி’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.