திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது 2 நீதிபதி அமர்வு இன்று விசாரிக்கிறது. தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென வந்த உத்தரவுக்கு எதிராக கோவில் செயல் அலுவலரின் மேல்முறையீடும் இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும், தீபம் ஏற்றப்பட்டதற்கான நிறைவேற்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற வழக்கும் மீண்டும் அதே நீதிபதியிடம் விசாரணைக்கு வருகிறது.