முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி

0பார்த்தது
முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, அந்த தொகுதியில் இருந்து தேர்வான எம்எல்ஏ ஒருவர் அமைச்சராகியுள்ளார். தவெக எம்எல்ஏ ராஜீவ் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இத்தொகுதியில் இதற்கு முன் வெற்றி பெற்ற யாரும் அமைச்சராக பதவி வகித்ததில்லை. 1952 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றபோதும், இத்தொகுதியில் இருந்து யாரும் அமைச்சரானதில்லை.

தொடர்புடைய செய்தி