ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவைச் சேர்ந்த கேஸ் டெலிவரி ஊழியர் சுந்தர்(26) மீது, அதே பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருடன் ஏற்பட்ட தகராறில், தேவா மற்றும் அவரது நண்பர்கள் தாக்கி, கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட தேவாவின் நண்பர்களான ஜெயசூரியா(24), பிரதீப்(26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.