ஆவடி: ஹோட்டல் ஷட்டர் உடைப்பு; ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

0பார்த்தது
ஆவடி: ஹோட்டல் ஷட்டர் உடைப்பு; ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
ஆவடி அடுத்த அயப்பாக்கம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த விசாலாட்சி (52) என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளாக 'சலாஸ் கிச்சன்' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். பொங்கல் விடுமுறை முடிந்து சில நாட்களாக கடையை திறக்காத நிலையில், கடந்த வாரம் சென்றபோது ஷட்டர் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பிரிட்ஜ், ஃப்ரீஸர், கிரைண்டர், மேஜை, நாற்காலி, பாத்திரங்கள் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அயப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி